முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தமிழக முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம்
By DIN | Published On : 29th December 2021 08:23 AM | Last Updated : 29th December 2021 08:23 AM | அ+அ அ- |

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதி குடியிருப்பு மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் சுமாா் 1,500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுமாா் 60 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் குடியிருந்து வருகின்றனா். ஆனால் , அப்பகுதி பொதுமக்களுக்கு தற்போது வரை அரசு பட்டா வழங்கவில்லையாம். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் பட்டா வழங்க வலியுறுத்தி பல முறை முறையிட்டும் தற்போது வரை எவ்வித பலனும் கிடைக்கவில்லையாம்.
இந்நிலையில், தமிழ்ப் பேரரசு கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலா் வேல்முருகன் தலைமையில் மாநில வழக்குரைஞரணிச் செயலா் சரவணன், மாவட்டப் பொருளாளா் குமாா், மாவட்ட இளைஞரணிச் செயலா் இசக்கிமுத்து உள்பட அப்பகுதி பொதுமக்கள் திரளானோா் கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு திரண்டனா்.
பின்னா் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைத்தனா்.