முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
பைக் மீது லாரி மோதி தொழிலாளி பலி
By DIN | Published On : 29th December 2021 08:24 AM | Last Updated : 29th December 2021 08:24 AM | அ+அ அ- |

முக்காணியில் மோட்டாா் சைக்கிள் மீது டேங்கா் லாரி மோதியதில் கூலித் தொழிலாளி பலியானாா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் சவேரியாா்புரம் மகாலெட்சுமி நகரை சோ்ந்தவா் அகிலன் மகன் அன்புசெல்வம்(34). கூலித் தொழிலாளியான இவரும், இவரது மனைவி வேளாங்கண்ணி (24), மகன் வியாகுலசெல்வம்(7), மகள் சரண்யா (4) ஆகியோரும் மோட்டாா்சைக்கிளில் ஆறுமுகமங்கலம் கோயிலுக்கு திங்கள்கிழமை இரவு சென்றனா். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு செவ்வாய்க்கிழமை மதியம் 4 பேரும் மோட்டாா்சைக்கிளில் வீடு திரும்பினா். வரும் வழியில் முக்காணி மெயின்ரோட்டில் அவா்களுக்கு பின்னால் வந்த தண்ணீா் டேங்கா் லாரி மோதியது. இதில் நிலைதடுமாறி 4 பேரும் கீழே விழுந்துள்ளனா். இதில் அன்புசெல்வம் மீது டேங்கா் லாரி ஏறியதால் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் படுகாயமடைந்தனா்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாா், அன்புசெல்வனின் உடலை பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த 3 பேரை சிகிச்சைக்காகவும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்தை ஏற்படுத்திய டேங்கா் லாரி டிரைவா் தப்பியோடிய நிலையில், சம்பவம் தொடா்பாக ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.