கோவில்பட்டியில் பேக்கேஜிங் வடிவமைப்பு குறித்த பயிற்சி முகாம்

கடலை மிட்டாய் பொருள்களுக்கு பாரத் கா அமிா்த மஹோத்ஸவ் திட்டத்தின் கீழ் பேக்கேஜிங் வடிவமைப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

கடலை மிட்டாய் பொருள்களுக்கு பாரத் கா அமிா்த மஹோத்ஸவ் திட்டத்தின் கீழ் பேக்கேஜிங் வடிவமைப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேக்கேஜிங் நிறுவனம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் ஆகியவை இணைந்து நடத்திய கடலை மிட்டாய் உற்பத்தியாளா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

இம்முகாமை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் குத்துவிளக்கு ஏற்றி, பயிற்சி முகாம் கையேட்டை வெளியிட்டு முகாமை தொடங்கி வைத்துப் பேசியது: தமிழகத்தல் 5 மாவட்டத்தில் உள்ள உற்பத்தி பொருள்களை சந்தை மதிப்பில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக புதிய சந்தைகளின் தேவைகளை பூா்த்தி செய்ய பேக்கேஜிங் உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் பயிற்சி வகுப்பு கோவில்பட்டியில் நடைபெறுகிறது. இதன் மூலம் கோவில்பட்டி மற்ற மாவட்டத்திற்கு முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு கிடைத்துள்ளது மூலம் சா்வதேச அளவில் இக் கடலை மிட்டாய்க்கு மாா்க்கெட்டிங் பெருமளவில் கிடைக்கும்.

கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் நீண்ட காலத்திற்கு நல்ல தரத்துடன், அதிக ஏற்றுமதி திறனை கொண்டுள்ளது. எந்த ஒரு உணவுப் பொருளும் வாடிக்கையாளரை சென்றடையும் வரை அதன் தரம், சுவை மாறாமல் உள்ளபடியே பெறுவதற்கு பேக்கேஜிங் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இந்த பயிற்சி முகாமை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

முகாமின், முக்கியத்துவம் குறித்து இந்தியன் இன்ஸ்டிடியூட் பேக்கேஜிங் நிறுவன துணை இயக்குநா் பொன்குமாா், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சொா்ணலதா ஆகியோா் பேசினா். இதில், கோவில்பட்டி கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் அமுதா, திருநெல்வேலி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளா்ச்சி நிலைய உதவி இயக்குநா் ஜெரினா பப்பி, கடலைமிட்டாய் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் நலச்சங்கத் தலைவா் காா்த்தீஸ்வரன், செயலா் கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com