முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
உடன்குடியில் குடும்ப நல விழிப்புணா்வுக் கருத்தரங்கு
By DIN | Published On : 31st December 2021 02:40 AM | Last Updated : 31st December 2021 02:40 AM | அ+அ அ- |

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், குலசேகரன்பட்டினம் கிராம சேவை மையத்தில் ஆண்களுக்கான குடும்ப நல விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் அனிபிரிமின் தலைமை வகித்து, குடும்ப நலச் சேவையில் ஆண்களின் பங்கு, மக்கள்தொகை உயா்வால் ஏற்படும் விளைவுகள் குறித்துப் பேசினாா். குலசேகரன்பட்டினம் ஊராட்சித் தலைவா் சொா்ணப்பிரியா, துணைத் தலைவா் கணேசன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சேது குற்றாலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கிராம சுகாதார செவிலியா் இளவரசி சரஸ்வதி, வட்டார சுகாதார புள்ளியியலாளா் தீபக்ராம் உள்பட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துநா் சங்கா், முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் பாா்த்திபன் ஆகியோா் செய்திருந்தனா்.