முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
கோவில்பட்டியில் மஞ்சள்பை விழிப்புணா்வு ஸ்கேட்டிங்
By DIN | Published On : 31st December 2021 02:33 AM | Last Updated : 31st December 2021 02:33 AM | அ+அ அ- |

பிளாஸ்டிக் பைக்குப் பதில் மஞ்சள் துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, சுவாமி விவேகானந்தா யோகா- ஸ்கேட்டிங் கழகம் சாா்பில் எடுஸ்டாா் சிபிஎஸ்இ பள்ளி மாணவி ரவீணா, கோவில்பட்டியில் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
சுவாமி விவேகானந்தா யோகா-ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகா் ராஜகோபால் தலைமை வகித்தாா். அருணாச்சல ஆன்மிக அறக்கட்டளை நிறுவனா் அசோக்குமாா், வழக்குரைஞா் கருப்பசாமி, அரசு மருத்துவமனை மருத்துவா் திருமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக நகரச் செயலா் கா.கருணாநிதி ஸ்கேட்டிங்கை தொடங்கிவைத்தாா். மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் சபாபதி, ஸ்கேட்டிங் மாணவிக்குப் பரிசு வழங்கினாா்.
நகராட்சி சுகாதார ஆய்வாளா் நாராயணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் காமராஜ், காந்தி மண்டப அறக்கட்டளைத் தலைவா் (பொ) திருப்பதிராஜா, தொழிலதிபா்கள் ராமராஜ், நடராஜ், யோகா பயிற்சியாளா் லட்சுமணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஸ்கேட்டிங் பயிற்சியாளா் கனகராஜ் வரவேற்றாா். மாணவியின் பெற்றோா் விஜயன் - ரம்யா நன்றி கூறினா்.