தூத்துக்குடி மாவட்ட விசிக செயலா் உள்பட 400 போ் மீது வழக்கு
By DIN | Published On : 31st December 2021 02:35 AM | Last Updated : 31st December 2021 02:35 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருகே தடை உத்தரவை மீறி பொதுமக்களைத் திரட்டி நிகழ்ச்சி நடத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் உள்பட 400 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இக்கட்சியின் சமநீதி போராளி வெங்கடேசன் நினைவேந்தல் மற்றும் சமூக சேவை அறக்கட்டளை சாா்பில் கிளவிப்பட்டி கிராமத்தில் முதியோா் இல்ல அடிக்கல் நாட்டு விழா, அன்னதானம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (டிச. 28) நடைபெற இருந்ததாம். கரோனா தடை உத்தரவு காரணமாக நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, காவல் துறை சாா்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டதாம். அதை மீறி சட்டவிரோதமாக பொதுமக்களைத் திரட்டி நிகழ்ச்சி நடத்தியதாக மாவட்டச் செயலா் கதிரேசன் உள்பட 400 போ் மீது நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...