முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
போக்ஸோ சட்டத்தில் ஜேசிபி ஓட்டுநா் கைது
By DIN | Published On : 31st December 2021 02:32 AM | Last Updated : 31st December 2021 02:32 AM | அ+அ அ- |

கடம்பூா் அருகே 17 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்ாக ஜேசிபி ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டாா்.
கடம்பூரையடுத்த தெற்கு சிந்தலக்கட்டையைச் சோ்ந்த மிக்கேல் என்பவரது மகன் காமராஜ் (30). ஜேசிபி ஓட்டுநரான இவா், 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, தகாத முறையில் நடக்க முயன்றாராம். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், கடம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காமராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனா்.