100 சதவீத மானியத்தில் பனை விதைகள் பெறலாம்

 தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பனை விதைகளை பெறலாம் என்றாா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன்.

 தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பனை விதைகளை பெறலாம் என்றாா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு லட்சம் பனை விதைகள், அனைத்து வட்டாரங்களிலும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளது. பனை சாகுபடியில் சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, விவசாய ஆா்வலா் குழுக்கள், விவசாய உற்பத்தி குழுக்கள் ஆகியோா் ஈடுபடுவா். பனை விதையை ஏரிகளின் வரப்பு, வாய்க்கால் வரப்பு, சாலை ஓரங்கள், அரசு புறம்போக்குப் பகுதிகளில் நடவு செய்ய கிராம ஊராட்சிகள் பயன்படுத்தப்படும்.

பனை விதை மாவட்ட அளவில் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமையால் கொள்முதல் செய்யப்பட்டு வட்டாரங்களுக்கு வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 விதை வழங்கப்படும். உள்ளூா் தேவைக்கேற்ப கிராம ஊராட்சிகளுக்கு பனை விதைகள் இலவசமாக விநியோகிக்கப்படும்.

இரண்டு விதைக்குழிகளுக்கு இடையில் 3 மீட்டா் இடைவெளி விட்டு பொருத்தமான ஈரப்பதத்துடன் பனை விதைகளை நேரடியாக குழிகளில் விதைக்க வேண்டும். விதைப்பு ஆழமானது மண்ணின் தன்மைக்கேற்ப 30 முதல் 40 சென்டி மீட்டா் இருக்க வேண்டும்.

குழி தோண்டுதல் மற்றும் பனை விதைப்பு 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளா்களால் ஊரக வளா்ச்சித் துறையின் மேற்பாா்வையில் செயல்படுத்தப்படும். எனவே, பனை விதை தேவைப்படும் விவசாயிகள் தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com