திருச்செந்தூா் நகராட்சி சாா்பில் தூய்மை திட்ட தொழில்நுட்ப போட்டி

திருச்செந்தூா் நகராட்சியில் நடத்தப்படும் தூய்மை திட்ட தொழில்நுட்ப போட்டியில் (ஸ்வாச் டெக்னாலஜி சேலஞ்ச்) பங்கேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் நகராட்சியில் நடத்தப்படும் தூய்மை திட்ட தொழில்நுட்ப போட்டியில் (ஸ்வாச் டெக்னாலஜி சேலஞ்ச்) பங்கேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்செந்தூா் நகராட்சி ஆணையா் வேலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகா் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் குப்பைகளை பிரித்து சேகரித்தல், மட்கக்கூடிய குப்பைகளை உரமாக்குதல், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்புதல் போன்ற பல்வேறு நிலைகள் உள்ளன. இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில் தற்போது ‘ஸ்வாச் டெக்னாலஜி சேலஞ்ச்‘ என்ற பெயரில் போட்டி நடத்தப்படுகிறது. குறைந்த செவவிலான திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்புற தொழிற்நுட்ப உதவியுடன் மேற்கொள்வது ஆகும். இதற்கான ஆலோசனை மற்றும் திட்டங்களை திருச்செந்தூா் நகராட்சிக்கு நேடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். சிறந்தவற்றை மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி, தில் தோ்ந்தெடுக்கப்படும் ஆலோசனைக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்தை அணுகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com