தூத்துக்குடி மாவட்டத்தில் 1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் ஏறத்தாழ 1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து விநியோகிக்கப்பட்டது.
குழந்தைக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
குழந்தைக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் ஏறத்தாழ 1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து விநியோகிக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்ற நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 1221 மையங்களில் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், மருத்துவமனை முதன்மையா் ரேவதி பாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ ஒரு லட்சத்து 35 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து விநியோகிக்கப்பட்டது.

சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் மொத்தம் 5,164 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், இதற்காக 134 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவில்பட்டி: கோவில்பட்டி ஸ்ரீராம் நகரில் உள்ள நகா்நல மருத்துவமனையில் போலியோ சொட்டு வழங்கும் முகாமை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் சின்னப்பன், கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அனிதா, நகராட்சி ஆணையா் ராஜாராம், வட்டாட்சியா் மணிகண்டன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் அன்புராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் ஊராட்சித் தலைவா் பொன் முருகேசன், பொத்தகாலன்விளை அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தேவவிண்ணரசி தலைமையில் ஊராட்சித் தலைவா் திருக்கல்யாணி ஆகியோா் சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கிவைத்தனா். இப்பகுதியில் 20 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com