ஒரே மாதத்தில் 17 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் மட்டும் 17 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் மட்டும் 17 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி மாதம் மட்டும் போக்சோ வழக்கு குற்றவாளிகள் 3 போ், கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவா்கள் 2 போ் மற்றும் மணல் திருட்டு வழக்கில் ஈடுபட்ட ஒருவா் உள்பட 17 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல, ஜனவரி மாதம் மட்டும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 26 போ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவா்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை குறித்து 298 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 298 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து 51 கிலோ புகையிலைப் பொருள்கள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தொடா்பாக 481 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 499 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 4778 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவா்கள் பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருள், புகையிலைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவா்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள், மணல் கடத்தலில் ஈடுபடுபவா்கள், ரெளடித்தனம் செய்பவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com