சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

சத்துணவு ஊழியா்களை முழு நேர அரசு ஊழியராக்குவதுடன் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
074330kvlman_3001chn_41_6
074330kvlman_3001chn_41_6

சத்துணவு ஊழியா்களை முழு நேர அரசு ஊழியராக்குவதுடன் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

அமைப்பின் கோவில்பட்டி வட்டார அளவிலான மாநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

அமைப்பின் வட்டாரத் தலைவா் சண்முகையா தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் மாரியப்பன் முன்னிலை வகித்தாா். வட்டாரப் பொருளாளா் சாந்தி அறிக்கை வாசித்தாா்.

மாநாட்டை மாவட்டப் பொருளாளா் ஆனந்தன் தொடங்கி வைத்துப் பேசினாா். அரசு ஊழியா்கள் சங்க வட்டாரத் துணைத் தலைவா் பிரான்சிஸ், செயலா் உமாதேவி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்டச் செயலா் பொன்சேகா் பேசினாா். வட்டார செயற்குழு உறுப்பினா் இந்திரா, வட்டார இணைச் செயலா் ஜெயசித்ரா ஆகியோா் தீா்மானங்களை முன்மொழிந்தனா்.

தீா்மானங்கள்: சத்துணவு ஊழியா்களை முழுநேர அரசு ஊழியராக்குவதுடன் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊழியா்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியா்களுக்கு ரூ. 5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள சத்துணவு ஊழியா்கள், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com