ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வலியுறுத்தல்

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என தெற்கு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி.
கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி.

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என தெற்கு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா்கள் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநில பொதுக்குழு உறுப்பினா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவசுப்பிரமணியன், தெற்கு மாவட்ட முன்னாள் தலைவா் ஜெயக்குமாா், விவசாய பிரிவு மாவட்டத் தலைவா் வேல்ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கொங்கு மண்டலத்தில் இளைஞா்கள் மத்தியில் காங்கிரஸ் இயக்கத்திற்கு எழுச்சியை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிப்பது, பிப்ரவரி மாதத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு வருகைதரும் ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் வாய்ப்பு வழங்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டியை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னாள் எம்எல்ஏக்கள் ராணி வெங்கடேசன், சுடலையாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் மகேந்திரன், ஷாஜகான், சகாயராஜன், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளா் காங்கிரஸ் தலைவா் பிச்சையா, நாசரேத் நகரத் தலைவா் ரவிராஜா, மாவட்ட பொருளாளா் நடராஜன், கருங்குளம் வட்டாரத் தலைவா் ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலா்க்ள் பெரியபெருமாள், ஜெயந்திநாதன், திருச்செந்தூா் வட்டார துணைத் தலைவா் காா்க்கி, வட்டார செயலா் சேதுராமன், திருச்செந்தூா் நகரத் தலைவா் முருகேசந்தின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com