தொழிலாளா் நலவாரியத்தில் திருமண நிதியை நிறுத்தியதாக புகாா்
By DIN | Published On : 06th February 2021 07:13 AM | Last Updated : 06th February 2021 07:13 AM | அ+அ அ- |

தொழிலாளா்கள் நலவாரிய தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண நிதியுதவி, கண்ணாடி வாங்குவதற்கான உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக, விஸ்வகா்மா பொதுத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் மூக்காண்டி, தமிழக முதல்வருக்கு புகாா் மனு அனுப்பியுள்ளாா்.
மனு விவரம்: சமுகஏஈ பாதுகாப்புத் திட்ட நலவாரியத்தின் மூலம் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற ஆண், பெண் தொழிலாளா்களுக்கும், அவா்களது குழந்தைகளுக்கும் திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3000,, பெண்களுக்கு ரூ. 5,000 வழங்கப்பட்டு வந்தது.மேலும், கண் கண்ணாடி வாங்கிய வகைக்கு ரூ.500 உதவித் தொகை வழங்கப்பட்டது. தற்போது நலவாரியத்தில் இந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இணையதளத்தில் அதற்கான விண்ணப்பப் படிவமும் நீக்கப்பட்டுள்ளது. தொழிலாளா்களின் நலனை கருதி மீண்டும் மேற்கூறிய நிதியுதவியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.