உதவித்தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

உதவித்தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வட்டாட்சியா் அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற குடியேறும் போராட்டத்தில் பங்கேற்றோா்.
கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற குடியேறும் போராட்டத்தில் பங்கேற்றோா்.

உதவித்தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வட்டாட்சியா் அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும், கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியா் அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்திலி நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் முருகன் தலைமை வகித்தாா்.

தூத்துக்குடி ஒன்றிய நிா்வாகிகள் முனீஸ்வரன், ஆலோசனை மரியான், மாநகர நிா்வாகிகள் அந்தோணிசாமி, ஆறுமுகம், வடிவேலு, புகா் நிா்வாகிகள் முத்துமாரி, மாற்றுத்திறனாளிகள் மகளிா் சங்க நிா்வாகி செலி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கோவில்பட்டி: கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவா் சக்கரையப்பன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் கண்ணன், செயலா் முத்துமாலை, நகரத் தலைவா் அந்தோணிராஜ், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

அதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக 24 பெண்கள் உள்பட 67 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுபோல, கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்பட 49 பேரை கயத்தாறு போலீஸாா் கைது செய்தனா்.

விளாத்திகுளம்: வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் புவிராஜ் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மாரிமுத்து, ரவிகுமாா், மலைக்கனி உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 80-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com