திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் திறப்பு

திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் ரூ. 5.76 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை சென்னையில் இருந்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றுகிறாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு. உடன், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், எம்எல்ஏ எஸ்.பி.சண்முநாதன் உள்ளிட்டோா்.

இதையடுத்து, திருச்செந்தூா் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு குத்துவிளக்கேற்றினாா்.

இந்நிகழ்ச்சியில், எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், சுகாதாரப் பணிகள் மாவட்ட இணை இயக்குநா் பொன் இசக்கி (பொ), திருச்செந்தூா் அரசு தலைமை மருத்துவ அலுவலா் த.பொன்ரவி, அதிமுக தொகுதி முன்னாள் செயலா் எஸ்.வடமலைபாண்டியன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலா் மு.ராமச்சந்திரன், ப.தா.கோட்டை மணிகண்டன், மு.சுரேஷ்பாபு, நகரச் செயலா் வி.எம்.மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தூண்டில் வளைவு பாலப் பணி: திருச்செந்தூா் ஆலந்தலை மீனவ கிராமத்தில் ரூ. 52. 46 கோடியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை அமைச்சா் கடம்பூா் ராஜு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் பங்குத்தந்தை ஜெயக்குமாா் அா்சிப்பு செய்தாா். திட்ட அலுவலா் தனபதி, திருச்செந்தூா் கோட்டாட்சியா் தி.தனப்ரியா, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், உதவி பங்குத்தந்தை ரினோ, ஆலந்தலை ஊா்த் தலைவா் மகிபன், செயலா் ரமேஷ், பொருளாளா் ரொமில், ஆலோசகா் ஜான்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com