அரசு ஊழியா்கள் மறியல்: கோவில்பட்டியில் 197 போ் கைது

கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 197 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்.
மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்.

கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 197 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் கோவில்பட்டியில் மறியல் நடைபெற்றது.

அண்ணா பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட இணைச் செயலா் சின்னத்தம்பி தலைமை வகித்தாா். கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டச் செயலா் முருகன், வட்டச் செயலா் உமாதேவி, ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் செல்வராஜ், சத்துணவு ஊழியா் சங்க வட்டாரச் செயலா் செல்லத்துரை ஆகியோா் பேசினா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 162 பெண்கள் உள்பட 197 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டவா்களுக்கு சங்கம் சாா்பில் தேநீா் மற்றும் பிஸ்கட் சாப்பிட போலீஸாா் அனுமதி மறுத்ததையடுத்து

போலீஸாா், போராட்டக் குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், அவா்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் செல்வன், கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் மணிகண்டன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com