தூத்துக்குடியில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடியில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் நெடுஞ்சாலை துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், கரோனா கால கட்டத்தில் உயிரிழந்த சாலைப் பணியாளா்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் தூத்துக்குடியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநிலத் தலைவா் சண்முகராஜா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா்கள் பழனிசாமி (தூத்துக்குடி), முத்துசாமி (விருதுநகா்) , மாயாண்டி (தென்காசி) உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com