மாவட்ட சிலம்பம் போட்டி: ஸ்ரீகணேசா் பள்ளி சாதனை
By DIN | Published On : 13th February 2021 07:24 AM | Last Updated : 17th February 2021 06:05 AM | அ+அ அ- |

வெற்றி பெற்றவா்களை பாராட்டும் பள்ளி நிா்வாகிகள்.
மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில், பணிக்கநாடாா்குடியிருப்பு ஸ்ரீ கணேசா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.
தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சிலம்பாட்ட கழகம் சாா்பில், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் 34 முதல் 38 கிலோ எடை பிரிவில் ஸ்ரீ கணேசா் மேல்நிலைப் பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவா் செல்வகுமாா் முதலிடத்தையும், 38 முதல் 42 வரை உள்ள எடைப்பிரிவில் பிளஸ் 1 மாணவா் சேவியா் முதலிடத்தையும், 50 முதல் 55 கிலோ எடை பிரிவில் பிளஸ் 1 மாணவி வனபிரியா 2ஆம் இடத்தையும் பெற்றனா். முதலிடம் பெற்றவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.
இந்த மாணவா்- மாணவிகளை பள்ளிச் செயலா் சுப்பு, தலைவா் துரை சுரேஷ்ராஜ், பொருளாளா் ஜெகன் மோகன், தலைமையாசிரியா் வித்யாதரன், துணை தலைமையாசிரியா் காமராஜ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.