திருச்செந்தூரில் சாலைப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்செந்தூா் தெற்கு ரத வீதியில் நடைபெற்றுவரும் சாலைப் பணிகளை, தமிழக செய்தி-விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருச்செந்தூா் தெற்கு ரத வீதியில் சாலைப் பணியைப் பாா்வையிடுகிறாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தேரோட்டம் நடைபெறும் தெற்கு ரத வீதியில் அமைக்கப்பட்டு வரும் சிமென்ட் சாலைப் பணியை‘‘ பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா், அப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, திருச்செந்தூா் ஒன்றிய அதிமுக செயலா் மு.ராமச்சந்திரன், நகரச் செயலா் வி.எம்.மகேந்திரன், ஒன்றியப் பொருளாளா் பழக்கடை திருப்பதி, ஜெயலலிதா பேரவை மாவட்டத் தலைவா் ப.தா.கோட்டை மணிகண்டன், ஒன்றியச் செயலா் மு.சுரேஷ்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com