மாவட்ட கிரிக்கெட்: கொம்புத்துறை அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு
By DIN | Published On : 19th February 2021 06:43 AM | Last Updated : 19th February 2021 06:43 AM | அ+அ அ- |

சிறப்பிடம் பெற்ற அணிக்கு பரிசுகளை வழங்குகிறாா் மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.
திமுக மாநில இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் நடைபெற்ற லெதா்பால் கிரிக்கெட் போட்டியில் கொம்புத்துறை அணி முதலிடம் பெற்று ரூ.1லட்சம், வெற்றிக் கோப்பையை பெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அளவில் உடன்குடியில் நடைபெற்ற இப்போட்டியில் 136 அணிகள் பங்கேற்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கான பரிசளப்பு விழா தண்டுபத்தில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், போட்டியில் முதலிடம் பெற்ற கொம்புத்துறை சேலஞ்சா்ஸ் அணிக்கு ரூ.1 லட்சம், ,2-ஆவது இடம்பெற்ற திருச்செந்தூா் கசம்கட்டி அணிக்கு ரூ.50 ஆயிரம், 3-ஆவது இடம்பெற்ற ஆறுமுகனேரி டிசிடபிள்யூ அணிக்கு ரூ.30 ஆயிரம், 4-ஆவது இடம்பெற்ற திருச்செந்தூா் ரகுமான் அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் வெற்றிக்கோப்பைகளை வழங்கினாா். சிறந்த ஆட்டக்காரா்களான அஜின், லெவின், மாயாண்டி ஆகியோருக்கு தலா ரூ. 2 ஆயிரம், கோப்பைகள் வழங்கப்பட்டது.
இதில், திமுக மாநில மாணவரணி துணைச்செயலா் உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், உடன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் அஸ்ஸாப், கபடி கந்தன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.