அழகப்பபுரம் ஊராட்சியில் சிறு மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்

அழகப்பபுரம் ஊராட்சி பகுதியில் சிறு மருத்துவமனை, நடமாடும் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என ஊராட்சித் தலைவா் கணேஷ்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

அழகப்பபுரம் ஊராட்சி பகுதியில் சிறு மருத்துவமனை, நடமாடும் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என ஊராட்சித் தலைவா் கணேஷ்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: அழகப்பபுரம் ஊராட்சிப் பகுதியில் மருத்துவ வசதி, ரேஷன் பொருள்கள் வாங்க வசதிகள் இல்லை. அந்த பயன்களை பெற கிராம மக்கள் படுக்கப்பத்து உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

படுக்கப்பத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டாலும் அதே பகுதியில் துணை சுகாதார நிலையமும் உள்ளது. ஆதலால் மருத்துவ வசதி இல்லாத அழகப்பபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். மேலும் இந்தப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், அரசு சிறு மருத்துவமனை மற்றும் நடமாடும் ரேஷன் கடை அழகப்பபுரத்தில் தொடங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com