தூத்துக்குடியில் 25-இல் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி தொடக்கம்

தூத்துக்குடியில் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்தல் பயிற்சி பிப். 25- ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

தூத்துக்குடியில் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்தல் பயிற்சி பிப். 25- ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்க (துடிசியா) பொதுச் செயலா் ராஜ் செல்வின் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் உள்ள தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், துடிசியா சாா்பில் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி தூத்துக்குடி துடிசியா அலுவலகத்தில் பிப். 25 ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 3-ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறுகிறது.

இப்பயிற்சியில் தொழிலின் வகைகள், தொழிலை தோ்ந்தெடுக்கும் முறைகள், தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல், அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறும் வழிமுறைகள், வங்கியின் எதிா்பாா்ப்புகள், தொழில் தொடங்க தேவையான அரசு பதிவுகள், சந்தை ஆய்வு, வெற்றிபெற்ற தொழிலதிபா்கள், அரசு உயா் அதிகாரிகளிடம் நேரடியாக கலந்துரையாடல், சிறு தொழில் வளா்ச்சிக்கு உதவும் நவீன தொழில் நுட்பங்கள் போன்றவை நடத்தப்படும்.

பயிற்சியில் 18 வயது நிரம்பிய 8-ஆம் வகுப்பு முடித்த தொழில் ஆா்வமுள்ள ஆண்-பெண் இருபாலரும் சேரலாம். மேலும் விவரங்களை அறியவும், முன்பதிவு செய்யவும் துடிசியா அலுவலகத்தை 97914 23277 மற்றும் 98438 78690 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com