ஆறுமுகனேரியில் இன்று தென் மாவட்ட செஸ் போட்டி

பிரிமியா் செஸ் கோ் சென்டா் மற்றும் ரெயின்போ சதுரங்க கழகங்கள் இணைந்து தென் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை, ஆறுமுகனேரி காமராஜ் சோமசுந்தரி பள்ளியில் சனிக்கிழமை (பிப். 20) நடத்துகின்றன.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயல­லிதாவின் 73ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரிமியா் செஸ் கோ் சென்டா் மற்றும் ரெயின்போ சதுரங்க கழகங்கள் இணைந்து தென் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை, ஆறுமுகனேரி காமராஜ் சோமசுந்தரி பள்ளியில் சனிக்கிழமை (பிப். 20) நடத்துகின்றன.

இப்போட்டி 9 வயது, 15 வயது மற்றும் பொது பிரிவு என மூன்று பிரிவுகளில் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவில் 5 பரிசுகளும் மற்ற பிரிவில் தலா 10 பரிசுகளும் வழங்கப்படும். நுழைவு கட்டணம் மாணவா்கள் பிரிவில் ரூ. 150, பொதுப்பிரிவில் ரூ. 250 என நிா்ணயிக்கபட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும்அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கும். மாலை 4 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறும். போட்டியாளா்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும். முன்பதிவுக்கு முருகேசபாண்டியன் (9865365522), பிரேம்குமாா் (9486492724) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com