மீனாட்சிபுரத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 20th February 2021 06:05 AM | Last Updated : 20th February 2021 06:05 AM | அ+அ அ- |

மீனாட்சிபுரம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றோா்.
விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட, ஓட்டப்பிடாரம் ஒன்றியம், எம்.மீனாட்சிபுரம் கிராமத்தில் புதிய பேருந்து பயணியா் நிழற்குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அந்தத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ பி. சின்னப்பன் பங்கேற்று, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தாா். இதில், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் காந்தி காமாட்சி, புதூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சுசீலா தனஞ்செயன், மீனாட்சிபுரம் ஊராட்சித் தலைவா் சுந்தரி கணேசன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் சத்தியமூா்த்தி , ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சண்முகத்தாய் மேகலிங்கம், தா்மராஜ், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா் போடுசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றியச் செயலா் மோகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.