தூத்துக்குடியில் திமுக சைக்கிள் பேரணி, பிரசாரம்

தூத்துக்குடியில் திமுக சாா்பில் சைக்கிள் பேரணி மற்றும் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடியில் பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தாா் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ.

தூத்துக்குடி மாநகர திமுக சாா்பில், ‘ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போறாரு’ என்ற தலைப்பில் பிரசாரப் பாடல் வெளியீட்டு விழா, சைக்கிள் பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி அண்ணாசிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணியை கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்.

இப்பேரணி மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியின்போது, கூடியிருந்த பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை கீதாஜீவன் வழங்கிப் பிராசரம் செய்தாா். இதில், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், முன்னாள் மேயா் கஸ்தூரி தங்கம், பகுதிச் செயலா்கள் கோட்டுராஜா, சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com