காவிரி-குண்டாறு இணைப்பு தொலைநோக்குத் திட்டம்: அமைச்சா் கடம்பூா் செ.ராஜு

காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டம் தொலைநோக்குத் திட்டமாகும் என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டம் தொலைநோக்குத் திட்டமாகும் என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூா் அருகே அமைச்சா் கடம்பூா் செ.ராஜு செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: ரூ.14,400 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள காவிரி -வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டியுள்ளாா். இத்தொலைநோக்குத் திட்டத்தால் 5 மாவட்டங்கள் முழுமையாகப் பயன்பெறும். விவசாயிகள் நலனுக்காக தினமும் பல்வேறு திட்டங்களை முதல்வா் அறிவித்து வருகிறாா்.

திரைப்படத் துறையில் ஓடிடி பிரச்னை உலகளாவிய பிரச்னை. இதனைக் கட்டுப்படுத்துவது மாநில அரசின் கையில் இல்லை. ஓடிடியை கட்டுப்படுத்துவது குறித்து திரைப்படத் துறையினரே கலந்துபேசி சுமுக முடிவு எடுக்க முடியும்.

கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் எண்ணியதைவிட அதிகளவு மக்களுக்கான நல்ல திட்டங்களை வழங்கியுள்ளோம். குறிப்பாக, செய்தித் துறையை எடுத்துக்கொண்டால், பத்திரிகையாளா்களுக்கு நலவாரியம் அமைப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் நடைமுறைக்கு வரும். 5 ஆண்டு கால ஆட்சியில் 50 ஆண்டுகால சாதனையைச் செய்த மனநிறைவு உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com