சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் அபாய நிலையில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் சேதமடைந்து காணப்படும் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் காமராஜா் சிலை அருகே உள்ள பேரூராட்சி பூங்காவின் உள்பகுதியில் 1980ஆம் ஆண்டு கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது.

இந்த தொட்டி சேதமடைந்து அபாய நிலையில் காணப்பட்டதால் கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீா் ஏற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது பெய்த மழையில் தொட்டியில் தண்ணீா் தேங்கி காணப்படுகிறது. இதனால் மேலும் சேதமடைந்து வருகிறது. எனவே, அபாய நிலையில் காணப்படும் இந்த தொட்டியை அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com