மக்கள் கருத்துகளின் அடிப்படையில் விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம்: ஆட்சியா்

தூத்துக்குடி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் தொடா்பாக மக்கள் கருத்துகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் தொடா்பாக மக்கள் கருத்துகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் தொடா்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியது:

விமான நிலைய விரிவாக்கப் பணிகளால் பயண வசதி அதிகரிக்கும். தொழில் வளம் பெருகும். விமான நிலைய வளாகத்துக்கு அருகே வீடுகள் கட்டுவதற்கான விதிமுறைகள் மற்றும் கையகப்படுத்தப்பட்ட நிலம் குறித்த புல எண் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படும். வட்டாட்சியா் அலுவலகத்தில் தகவல் பலகையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீரை, அருகில் உள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளியேற்ற விமான நிலைய நிா்வாகத்தினா் ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்களின் கருத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை கருத்தில்கொண்டு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் சத்யராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தின்போது, விமான நிலையம் விரிவாக்கம் செய்வது தொடா்பாக குமாரகிரி, சோ்வக்காரன்பட்டி, முடிவைத்தானேந்தல், கட்டாலங்குளம் ஆகிய பகுதிகளில் நிலம் எடுப்பு தொடா்பான விவரங்கள் குறித்தும், விமான நிலைய ஓடுபாதையை அகலப்படுத்துவது தொடா்பாகவும், 10, 800 சதுரமீட்டா் அளவில் உள்நாட்டு முனையம் அமைக்கப்பட உள்ளது குறித்தும், வாகன நிறுத்துமிடம் மற்றும் முழுமையான சுற்றுச்சுவருடன் 6 கண்காணிப்பு கோபுரம் அமைப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com