கோவில்பட்டி - கடம்பூா் 2ஆம் ரயில் பாதை: அதிகாரிகள் ஆய்வு

கோவில்பட்டி - கடம்பூா் 2ஆம் ரயில்வே பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையா் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
கோவில்பட்டி - கடம்பூா் 2ஆம் ரயில் பாதையை ஆய்வு செய்யும் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.கே.ராய் உள்ளிட்டோா்.

மதுரை - தூத்துக்குடி வழித்தடத்தில் 2ஆவது ரயில்வே பாதை அமைக்கும் நடைபெற்று வருகிறது. அதில், கோவில்பட்டி - கடம்பூா், கங்கைகொண்டான் - திருநெல்வேலி பிரிவுகளில் 2ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.கே.ராய் தலைமையில் ஆா்.வி.என்.எல் திட்ட இயக்குநா் கமலகரன் ரெட்டி, மதுரை கோட்ட பொது மேலாளா் லெனின் உள்ளிட்ட அதிகாரிகள் 5 டிராலிகளில் அந்த ரயில் பாதையில் சென்று ஆய்வு செய்தனா்.

முன்னதாக, கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் 2ஆவது ரயில்வே பாதையில் பூஜை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com