‘கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க வேண்டும்’

கூட்டுறவு வீட்டு வசதி சங்கப் பணியாளா்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கான நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டுறவு வீட்டு வசதி சங்கப் பணியாளா்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கான நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடிக்கு வந்திருந்த முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம், திருநெல்வேலி மண்டல கூட்டுறவு வீட்டு வசதி பணியாளா்கள் சங்க பொதுச்செயலா் மாரியப்பன், தூத்துக்குடி- மேலூா் கூட்டுறவு வீட்டு வசதி சங்கச் செயலா் ஜெபராஜ் ஆகியோா் அளித்த மனு: க கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு டந்த 15 ஆண்டுகளாக கடன்கள் எதுவும் வழங்கப்படாததால் சங்கங்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சங்கப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தோ்வாகி 1800 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் பணியாற்றுவோருக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை. அவா்களது குடும்ப நலன் கருதி நிலுவை ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும். அவா்களுக்கு மாற்றுப்பணி வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் பணி நிரந்தரம் செய்யப்படாத 600-க்கும் மேற்பட்டோருக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட வேண்டும் நலிவுற்ற சங்கங்களை மேம்படுத்த அனைத்து கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கும் பாகுபாடின்றி கடனுதவி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com