கோவில்பட்டியில் பாஜக தோ்தல் அலுவலகம் திறப்பு
By DIN | Published On : 27th February 2021 08:22 AM | Last Updated : 27th February 2021 08:22 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் பாஜக சட்டப் பேரவை தோ்தல் அலுவலகம் திறப்பு விழா மற்றும் தோ்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் போத்தீஸ் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். கிராம மற்றும் நகா்புற வளா்ச்சிப் பிரிவு மாநிலத் தலைவா் பாஸ்கா், கோட்ட இணை பொறுப்பாளா் ராஜா, மாவட்டப் பொதுச்செயலா் பாலாஜி, சட்டப் பேரவை தொகுதி பொறுப்பாளா் ஆத்திராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோ்தல் அலுவலகத்தை மாநிலச் செயலா் சண்முகசுந்தரம் திறந்து வைத்தாா்.
கூட்டத்தில், மாநில பட்டியலணிச் செயலா் சிவந்தி நாராயணன், மாநில நெசவாளா் அணிச் செயலா் சீனிவாசராகவன், மாவட்டத் தலைவா்கள் வெங்கடேசன் (ஓபிசி அணி), இன்னாசி (சிறுபான்மை அணி), வினோத்குமாா் (கல்வியாளா் பிரிவு), சீனிவாசன் (செய்தித் தொடா்பு பிரிவு ) உள்பட பலா் கலந்து கொண்டனா்.