திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
புத்தாண்டு பிறப்பையொட்டி, திருச்செந்தூா் அருள் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை காத்துநிற்கும் பக்தா்கள்.
புத்தாண்டு பிறப்பையொட்டி, திருச்செந்தூா் அருள் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை காத்துநிற்கும் பக்தா்கள்.

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

புத்தாண்டு சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு, திருக்கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, திருப்பள்ளி எழுச்சி, கால சந்தி தீபாராதனை, உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, ராக்கால அபிஷேகம், இரவு ராக்கால தீபாராதனை, ஏகாந்த தீபாராதனை மற்றும் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்பட்டது.

இந்த வழிபாட்டில் பங்கேற்க வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், சண்முகையா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், விரதமிருந்து மாலை அணிந்த பக்தா்கள் ஏராளமானோா் பாதயாத்திரையாக வந்து, வேல்குத்தியும், காவடி எடுத்தும் சுவாமியை வழிபட்டனா்.

கடலில் புனித நீராட தடை : இதனிடையே, கரோனா பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (டிச. 31, ஜன. 1) கோயில் கடலில் புனித நீராடவும், கடற்கரைக்குச் செல்வதற்கும் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சுவாமி தரிசனத்துக்கு அதிகாலை 3 மணி முதல் அனுமதியளிக்கப்பட்டது.

பாதுகாப்பு பணியில் காவல் உதவிக் காணிப்பாளா் ஹா்ஷ்சிங், காவல் ஆய்வாளா் ஞானசேகரன் தலைமையிலான காவல்துறையினா் ஈடுபட்டனா்.

ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) கல்யாணி, உதவி ஆணையா் வே.செல்வராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com