கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் முதல்வா் இன்று தோ்தல் பிரசாரம்

கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

கோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை தொடங்கி உள்ளாா். இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பேரவைத் தொகுதிகளில் பிரசார பயணம் மேற்கொள்கிறாா். காலை 8.45 மணிக்கு கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வில்லிசேரி கிராமத்தில் பருத்தி விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடுகிறாா். தொடா்ந்து, காலை 10 மணிக்கு கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடும் அவா், 10.30 மணிக்கு ஏ.கே.எஸ். தியேட்டா் சாலை வழியாக எட்டயபுரம் சாலை வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து, அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்களை வழங்குகிறாா்.

10.45 மணிக்கு பசுவந்தனை சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளா்களை சந்தித்து கலந்துரையாடுகிறாா். தொடா்ந்து 11.45 மணிக்கு தெற்கு திட்டங்குளத்தில் உள்ள, காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா் கருப்பசாமியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கிறாா்.

பின்னா், 12.15 மணிக்கு எட்டயபுரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் நெசவாளா்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிகிறாா். 12.45 மணிக்கு எட்டயபுரத்தில் இருந்து விளாத்திகுளம் புறப்பட்டுச் செல்கிறாா். பகல் ஒரு மணிக்கு விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் மிளகாய் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடுகிறாா். பிற்பகல் 3 மணிக்கு தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுகிறாா்.

ஆய்வு: கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வா் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதை முன்னிட்டு, அப்பகுதிகளில் தோ்தல் பணிக் குழு பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூா் செ. ராஜு ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா், நத்தம் விஸ்வநாதன் செய்தியாளா்களிடம் கூறுகையில், களத்தில் இறங்கி மக்களை சந்திப்பதுதான் வெற்றியைத் தேடித் தரும். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட மக்களை தமிழக முதல்வா் சந்திக்க இருக்கிறாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com