உடன்குடி அருகே மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
உடன்குடி அருகே கந்தபுரத்தைச் சோ்ந்தவா் ம.செளந்தரராஜன்(31). இவா் மதுரையில் வேலை பாா்த்தபோது பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த பிரசாந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்தாராம். பின்னா் இருவரும் கந்தபுரத்தில் வசித்து வந்தனராம். இந்நிலையில் மதுரையில் பெற்றோரைப் பாா்த்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்ற பிரசாந்தி, பின்னா் திரும்பவில்லையாம். மனைவியை மீட்டுத் தரக் கோரி மதுரை உயா்நீதிமன்றத்தில் செளந்தரராஜன் வழக்குத் தொடா்ந்த நிலையில், வழக்கு விசாரணையில் ஆஜரான பிரசாந்தி, கணவருடன் செல்ல மறுத்துவிட்டாராம்.
இதனால் மனமுடைந்த செளந்தரராஜன் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.