
பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறாா் உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப் அலி பாதுஷா.
உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சாா்பில் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப் அலி பாதுஷா தலைமை வகித்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தாா். இதில், கூட்டுறவு கடன் சங்க இயக்குநா்கள், பனைவெல்லம் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் முத்துராமலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.