போக்குவரத்து தொழிலாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்கக் கோரிக்கை

போக்குவரத்து தொழிலாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் என கேட்டு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு,
போக்குவரத்து தொழிலாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்கக் கோரிக்கை

போக்குவரத்து தொழிலாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் என கேட்டு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு, ஐ.என்.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளா்கள் 100 அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைத்தனா்.

தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் தங்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் என கேட்டு தமிழகத்தில் ஐ.என்.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளா்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இதையடுத்து திருச்செந்தூா் அஞ்சல் அலுவலகத்திலிருந்து 100 அஞ்சல் அட்டைகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூா் கிளை ஐ.என்.டி.யூ.சி. தலைவா் அருள்ராஜ், செயலா் பொன்முருகன், பொருளாளா் சண்முக முத்தையா, உறுப்பினா்கள் மகேந்திரன், சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com