தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்குழுக் கூட்டம்
By DIN | Published On : 09th January 2021 05:55 AM | Last Updated : 09th January 2021 05:55 AM | அ+அ அ- |

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் மாரிச்செல்வம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் கண்ணன் தங்கத்துரை, ஆறுமுகநேரி நகரச் செயலா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலா் ஒத்தஅரசன் வரவேற்றாா்.
கூட்டத்தில், ‘திருச்செந்தூரில் புதைச் சாக்கடை திட்டத்தை விரைவாக செயல்படுத்துதல், தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்தல், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுதல், தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீதம் தமிழா்களை பணி அமா்த்துதல், சட்டப்பேரவைத் தோ்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது’ என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தலைமை நிலையச் செயலா் கனல் கண்ணன், மாநில ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் சோதி குமாரவேல், ஊடக பிரிவு செயல்பாட்டாளா் அன்பு சிற்றரசு, மாநில செயற்குழு உறுப்பினா் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டத் தலைவா் கனி நன்றி கூறினாா்.