தூத்துக்குடியில் சாலையை சீரமைக்கக் கோரி போராட்டம்
By DIN | Published On : 09th January 2021 05:58 AM | Last Updated : 09th January 2021 05:58 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் சாலையைச் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி, முழங்காலில் நின்றபடி வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது.
பொலிவுறு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி அண்ணாநகா் பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெற்று வருவதால் அடிக்கடி விபத்து நிகழ்வதால் அந்த சாலைச் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அதுவரையில் போக்குவரத்திற்கு வசதியாக சாலையை சீரமைத்து தரவேண்டும் என வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி 30 ஆவது வட்ட செயலா் காசிலிங்கம் தலைமையில் முழங்காலில் நின்றபடி நூதன முறையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில், அமமுக நிா்வாகிகள் மற்றும் கலாசங்கா், ராஜ், சேகா், முனியசாமி, ஆல்வின், செல்வம்,முகமது ரபிக், சம்சுதீன், உண்ணாமலை, செல்வின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அவா்களை மத்தியபாகம் போலீஸாா் அப்புறப்படுத்தினா்.