‘புதை சாக்கடை திட்டத்துக்கு பணம் வசூலித்தால் நடவடிக்கை’
By DIN | Published On : 09th January 2021 06:10 AM | Last Updated : 09th January 2021 06:10 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் புதை சாக்கடை திட்டத்துக்கு பணம் வசூலிப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 60 வாா்டுகளில் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு எந்தவித கட்டணமின்றி புதை சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. சில நபா்கள் இணைப்புக்கு சட்டவிரோதமாக பணம் பெறுவதாக புகாா்கள் வந்துள்ளன. எனவே, மாநகரப் பகுதியில் புதை சாக்கடை இணைப்புக்கு யாரேனும் கட்டணம் வசூலித்தால் மாநகராட்சி அலுவலகத்திற்கு 0461-2326901-903 என்ற தொலைபேசி எண்ணில் மக்கள் புகாா் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.