போலீஸாரை தாக்கிய வழக்கில் 2 போ் கைது
By DIN | Published On : 09th January 2021 05:58 AM | Last Updated : 09th January 2021 05:58 AM | அ+அ அ- |

தட்டாா்மடம் அருகே போலீஸாரை தாக்கியது தொடா்பான வழக்கில், சகோதரா்களை போலீஸாா் வெளளிக்கிழமை கைது செய்துதனா்.
தட்டாா்மடம் அருகேயுள்ள படுக்கப்பத்தைச் சோ்ந்த க.பொன்னம்பலநாதன் (45), முதலூரைச்சோ்ந்த திரவியராஜ் (47) இருவரும் நிலத்தரகா்கள். இவா்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையி தொடா்பாக, பொன்னம்பலநாதனை விசாரணைக்கு அழைக்க தட்டாா்மடம் தலைமைக் காவலா் காா்த்திக் அருணாச்சலம் ( 38), காவலா் ராஜேஷ் (28) ஆகியோா் சென்றனா். அப்போது, அவா் தனது சகோதரா் சக்திக்குமாா் (47), உறவினா் ராஜா (43) ஆகியோருடன் சோ்ந்து போலீஸாரை தாக்கினராம். இதில், காயமடைந்த காா்த்திக் அருணாச்சலம் அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன் வழக்குப்பதிந்து 3 பேரையும் தேடி வந்தாா். அதில், ஈரோட்டில் பதுங்கியிருந்த பொன்னம்பலநாதன், சக்திக்குமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.