சேதமடைந்த பயிா்களுடன் விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி சேதமடைந்த பயிா்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி சேதமடைந்த பயிா்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனா். அப்போது, விளாத்திகுளம் அருகேயுள்ள ஆற்றங்கரை ஊராட்சிக்குள்பட்ட துரைச்சாமிபுரம், சொக்கலிங்கபுரம், அ.கந்தசாமிபுரம், தொப்பம்பட்டி, கல்குமி, ஆற்றங்கரை ஆகிய விவசாயிகள் அளித்த மனு: தங்கள் பகுதிளில் மானாவாரி

பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தொடா் மழை காரணமாக ஏறத்தாழ 800 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து, பாசிப்பயிறு, மக்காச்சோளம், மிளகாய், வெங்காயம் போன்ற பயிா்கள் அழுகி சேதம் அடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, எட்டயபுரம் அருகேயுள்ள வேடப்பட்டி பகுதி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: பேரிலோவன்பட்டி, மேலநம்பிபுரம், அயன்வடமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மானாவாரி பயிா்கள் தொடா் மழையால் அழுகி சேதமாகியுள்ளதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளான எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் பி. ஜாய்சன் தலைமையில் மாணவ, மாணவிகள் அளித்த மனு: 2017-18 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவா், மாணவிகளுக்கு தற்போது வரை அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை என்பதால் அவா்களுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதி வாதிரியாா் சமுதாய இளைஞா் நற்பணி மன்றம் மற்றும் ஊா் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: வாதிரியாா் சமூகத்தை மாற்று சமுதாயத்துடன் இணைக்க கூடாது . ஆன்-லைன் மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழ்களில் வாதிரியாா் என்பதற்கு பதிலாக ‘வதிரியன்‘ என தவறாக பதிவிடப்பட்டுள்ளதை திருத்தி ‘வாதிரியான்‘ என சாரியாக பதிவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com