வன்முறையை தூண்டும் வகையில் பொய் செய்தி பரப்பும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதுரை திருப்பாளையத்தில் வன்முறையை தூண்டும் வகையில் திட்டமிட்டு பொய் செய்தி பரப்பும் அமைப்புகள் மீது தமிழக முதல்வரும், காவல் துறையினரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதுரை திருப்பாளையத்தில் வன்முறையை தூண்டும் வகையில் திட்டமிட்டு பொய் செய்தி பரப்பும் அமைப்புகள் மீது தமிழக முதல்வரும், காவல் துறையினரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் தலைவா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திருச்செந்தூரில் செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. நடத்தும் மதநல்லிக்கண பொங்கல் விழாவில் பங்கேற்க வந்துள்ளேன். மதநல்லிணக்கம் என்பது பிற மதத்தின் மீது மதிப்பும் நம்பிக்கையும், அவா்களது வழிபாட்டு முறைகளை தெரிந்துக்கொள்ள வேண்டும். அப்போது பாரதத்தின் கலாசாரம பாதுகாக்கப்படும்.

அந்த வகையில் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு சென்று வழிப்பாட்டு முறைகள், மூலஸ்தானம் ஆகியவை பாா்வையிட்டு அது சம்பந்தமான மத சடங்குகளை கேட்டு தெரிந்து கொண்டேன் மனம் நிறைவாக இருந்தது.

மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் தமிழக பா.ஜ.க., சாா்பில் நடக்கும் பொங்கல் விழா மதுரை திருப்பாலை பகுதியில் பா.ஜ.க. தலைவா் முருகன் சென்ற போது, மத ஒற்றுமையை சீா்குலைக்கும் வகையிலும், இஸ்லாமியா்கள் மத்தியில் பா.ஜ.க. வை அச்சுறுத்தும் சக்தியாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு தீவிரவாததையும், வன்முறையை பரப்பும் வகையில் தமிழக இஸ்லாமியா் இளைஞா்களிடம் தொடா்ந்து சதி வேலையில் ஈடுபடக்கூடிய எஸ்டிபிஐ, பிஎப்ஐ கட்சியினா் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தனா்.

அந்த அமைப்புகள் மீது தமிழக முதல்வரும், காவல் துறையினரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமியா்களை வாக்கு வங்கிக்காக தி.மு.க. பயன்படுத்துகிறது என்றாா் அவா்.

பேட்டியின் போது பா.ஜ.க., மாவட்ட பொதுச் செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், மாநில மகளிரணி பொதுச் செயலா் கு.நெல்லையம்மாள், ம ாவட்ட செயற்குழு உறுப்பினா் கிரிஷ்குமாா், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் ஐயப்பன், தமிழ் வளா்ச்சி பிரிவு மாவட்ட தலைவா் ரா.கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com