அனுமன் ஜயந்தி: கோவில்பட்டியில் சிறப்பு வழிபாடு

அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, கோவில்பட்டி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயா் சன்னதியில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயா் சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.

இதையொட்டி காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அதுபோல, வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் காலை 9 மணிக்கு கணபதி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்தாபன கும்ப கலச பூஜை, ருத்ர ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை மற்றும் பூா்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், ஸ்ரீ அனுமனுக்கு மஞ்சள், பால், தேன், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், வெற்றிலை மாலை, துளசிமாலை மற்றும் வடை மாலை சாத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

புறவழிச் சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சீதா ராம லெட்சுமண ஆஞ்சநேயா் திருக்கோயிலில் ஆஞ்சநேயா் ஜயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com