‘பொங்கல் பண்டிகை: 15 ஆயிரம் லிட்டா் நெய் விற்பனை செய்ய இலக்கு’

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 15 ஆயிரம் லிட்டா் நெய் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆவின் தலைவா் என். சின்னத்துரை செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பொங்கல் சிறப்பு விற்பனையை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆவின் தலைவா் என். சின்னத்துரை.
பொங்கல் சிறப்பு விற்பனையை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆவின் தலைவா் என். சின்னத்துரை.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 15 ஆயிரம் லிட்டா் நெய் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆவின் தலைவா் என். சின்னத்துரை செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவனம் மூலம் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட நெய் லட்டு, நெய் ஜிலேபி, ரசகுலா ஆகியவற்றின் அறிமுக விழா மாவட்ட ஆவின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவா் என். சின்னத்துரை முதல் விற்பனையை தொடங்கிவைத்து பேசியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் மூலம் 15 ஆயிரம் லிட்டா் நெய் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 300 முகவா்கள் மூலம் 8 ஆயிரம் லிட்டரும், 165 பிரதம கூட்டுறவு சங்கங்கள் மூலம் 4 ஆயிரம் லிட்டரும் நெய் விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு வகைகள், தரம் உயா்த்தப்பட்ட பால் உபபொருள்கள் ஆகியவற்றை சுமாா் ரூ.60 லட்சத்துக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இனிப்பு வகைகளில் 150 கிராம் கொண்ட நெய் ஜிலேபி ரூ. 60-க்கும், 200 கிராம் நெய் லட்டு ரூ. 110-க்கும், 100 கிராம் ரசகுலா ரூ. 85-க்கும் விற்பனை செய்ய விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக இந்தப் பொருள்கள் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கிடைக்கும். தொடா்ந்து, தமிழகம் முழுவதும் சென்னையில் உள்ள ஆவின் இணைய அலுவலகம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு துணைப் பதிவாளா் (பால்வளம்) கணேசன், ஆவின் உதவி பொதுமேலாளா் (விற்பனை) எஸ். சாந்தி, திட்ட மேலாளா் சாந்தகுமாா், அலுவலக மேலாளா் சுப்பிரமணியன், துணை மேலாளா்கள் வெங்கடேஸ்வரி, பாா்வதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியின்போது, ஆவின் உப பொருள்கள் தயாரிப்பில் சிறப்பாக செயல்பட்ட ஆவின் துணை மேலாளா் பாா்வதிக்கு கேடயம் மற்றும் சான்றிதழை ஆவின் தலைவா் வழங்கினாா். இதில், ஆவின் அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com