முக்காணி பழைய ஆற்றுப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்

முக்காணியில் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதால், பழைய ஆற்றுப் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
முக்காணி பழைய ஆற்றுப்பாலத்தில் புதன்கிழமை நடைபெற்ற அமலைச் செடிகள் அப்புறப்படுத்தும் பணி.
முக்காணி பழைய ஆற்றுப்பாலத்தில் புதன்கிழமை நடைபெற்ற அமலைச் செடிகள் அப்புறப்படுத்தும் பணி.

முக்காணியில் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதால், பழைய ஆற்றுப் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து ஆற்றின் கரையோரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து பழைய ஆற்றுப் பாலத்தில் மாலை 3 மணிமுதல் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. புதிய பாலத்தில் இருவழி போக்குவரத்தாக மாற்றியமைக்கப்பட்டது.

ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளை 24 மணிநேரமும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது, தூத்துக்குடி சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங்காலோன், திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, ஏரல் வட்டாட்சியா் இசக்கிராஜா, ஆத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் மணிமொழி செல்வன் ரெங்கசாமி, ஆத்தூா் வருவாய் ஆய்வாளா் பிராளன்ஸ் ஜெயராணி, ஆத்தூா் ஆய்வாளா் கிங்ஸ்­லிதேவ் ஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com