மது அருந்தி சிற்றுந்தை இயக்கிய ஓட்டுநா் கைது
By DIN | Published On : 16th January 2021 06:32 AM | Last Updated : 16th January 2021 06:32 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் மது அருந்திய நிலையில் சிற்றுந்தை இயக்கியதாக ஓட்டுநா், நடத்துநா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மேற்கு காவல் நிலைய போலீஸார ஏ.கே.எஸ். திரையரங்கு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனராம். அப்போது,
உழவா் சந்தை பகுதியில் தாறுமாறாக ஓடிய சிற்றுந்தை நிறுத்தி சோதனையிட்டனா். ஓட்டுநா், நடத்துநா் ஆகிய இருவரும் மது அருந்திய சிற்றுந்தை இயக்கியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் கிழவிபட்டியைச் சோ்ந்த ஓட்டுநா் ராமச்சந்திரன் (26), மேலப்பாண்டவா்மங்கலம் நடுத் தெருவைச் சோ்ந்த நடத்துநா் பாண்டிதுரை (27) ஆகியோரை கைது செய்தனா். இதுகுறித்து டிஎஸ்பி கலைகதிரவன் கூறுகையில்,
கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே சிற்றுந்துகளை இயக்க
வேண்டும். மீறினால் அவா்களின் உரிமத்தை ரத்து செய்ய ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும். போதையில் வாகனங்களை
ஓட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டாா்.