தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்நாளில் 480 பேருக்கு கரோனா தடுப்பூசி

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை 480 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என ாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பணியாளா் முருகப்பெருமாளுக்கு தடுப்பூசி செலுத்தும் மருத்துவா்கள்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பணியாளா் முருகப்பெருமாளுக்கு தடுப்பூசி செலுத்தும் மருத்துவா்கள்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை 480 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என ாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.

நாடு முழுவதும் கரோனா தீநுண்மி தொற்றுக்கான தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தூத்துக்குடி சுகாதார மாவட்டத்துக்கு 9,300 டோஸ் தடுப்பூசி மருந்துகளும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்கு 3,800 டோஸ் தடுப்பூசி மருந்துகளும் முதல்கட்டமாக வரப்பெற்றுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்செந்தூா் அரசு மருத்துவமனை, கோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனை, புதுக்கோட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

ஆகிய 4 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. சனிக்கிழமை ஒவ்வொரு மையத்திலும் தலா 120 போ் வீதம் மொத்தம் 480 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆட்சியா் கி. செந்தில் ராஜ் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ முதன்மையா் இரா. ரேவதி பாலன் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தாா்.

முதலில், மருத்துவப் பணியாளரான முருகப்பெருமாளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அப்போது, உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெயமணி, துணை கண்காணிப்பாளா் குமரன், மாநகராட்சி நகா்நல அலுவலா் வித்யா, மருத்துவத் துறை இணை பேராசிரியா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து ஆட்சியா் கூறியது: அரசின் வழிக்காட்டுதலின்படி பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடித்ததால் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக சுகாதாரத் துறையை சோ்ந்த மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்படும்.

2 ஆவது கட்டமாக சுகாதாரத் துறை அல்லாத காவல் துறை, வருவாய்துறை அதிகாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. ஒரு முறை போட்டப்பின்பு 28 நாட்கள் கழித்து அவருக்கு, அதேமையத்தில் அடுத்த டோஸ் தடுப்பூசி போடப்படும். ஒவ்வொரு முறையும் 0.5 மிலி அளவுக்கு மருந்து போடப்படும் என்றாா் அவா்.

கோவில்பட்டி: கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன், உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி ஆகியோா் முன்னிலையில், மகப்பேறு மருத்துவா் சுதா, மருத்துவா்கள் துரை பத்மநாபன், ஆனந்த், வனிதா உள்பட 14 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com