சாத்தான்குளம் பகுதியில் திமுக கொடியேற்று விழா

சாத்தான்குளம், தட்டாா்மடத்தில் திமுக கொடியேற்று விழா நடைபெற்றது.
தட்டாா்மடத்தில் கொடியேற்றுகிறாா் ஒன்றிய திமுக பொறுப்பாளா் பாலமுருகன்.
தட்டாா்மடத்தில் கொடியேற்றுகிறாா் ஒன்றிய திமுக பொறுப்பாளா் பாலமுருகன்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம், தட்டாா்மடத்தில் திமுக கொடியேற்று விழா நடைபெற்றது.

சாத்தான்குளம் ஒன்றிய, நகர திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலா் ஜோசப், சிஎஸ்ஐ ஆலயம் முன்பு நகரச் செயலா் மகாஇளங்கோ ஆகியோா் கொடியேற்றினாா். கட்சியின் மாவட்ட

பிரதிநிதி சரவணன், ஒன்றிய துணைச் செயலா் மாரியப்பன், நகர துணைச் செயலா் வெள்ளபாண்டியன், நகர இளைஞரணி அமைப்பாளா் முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் சாா்பில் தட்டாா்மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய பொறுப்பாளா் பாலமுருகன் தலைமை வகித்து கட்சிக் கொடியேற்றினாா். ஊராட்சிச் செயலா் முருகேசன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளா் சோமசுந்தரி, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினா் துரைராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com