ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகள் தீவிரம்

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பெருமளவில் தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால், தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.

கரையோர பகுதிகளான முத்தாலங்குறிச்சி, புளியங்குளம், ஆழ்வாா்தோப்பு, அப்பன் கோவில், சிவராமமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் புகுந்தது. திருநெல்வேலி-திருச்செந்தூா் நெடுஞ்சாலையில் 2 அடி உயரத்துக்கு மழைநீா் சென்றது.

மழை குறைந்ததால் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு வழியாக ஆற்றில் சனிக்கிழமை விநாடிக்கு 33 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால், கருங்குளம், புளியங்குளம் சாலையில் தண்ணீா் வடியத் தொடங்கியது. இதையடுத்து திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இதற்கிடையே கொங்கராயகுறிச்சி, ஆழ்வாா்தோப்பு மற்றும் முத்தாலங்குறிச்சியில் வெள்ளம் வடிந்ததால் அப்பகுதி மக்கள் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பினா். இதையடுத்து வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனா். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை வட்டாட்சியா் பாா்வையிட்டாா். தெற்கு தோழப்பன்பண்ணையில் புகுந்த வெள்ளத்தால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டன. ஆகவே, அப்பகுதி மக்களுக்கு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முகாம்களில் தங்கியுள்ளவா்களுக்கு சாரல் பவுன்டேசன் சாா்பில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் மாநில இளைஞரணி தலைவா் சுரேஷ் தலைமையில் தொழிலதிபா் ராமசாமி உள்ளிட்டோா் நிவாரண உதவிகள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com